யாழ்.ஊர்காவற்றுறையில் கோவிலை உடைத்து 64 பவுண் தங்க நகைகள் கொள்ளை!

ஆசிரியர் - Editor I
யாழ்.ஊர்காவற்றுறையில் கோவிலை உடைத்து 64 பவுண் தங்க நகைகள் கொள்ளை!

யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறையில் உள்ள ஆலயமொன்றில் 64 பவுண் தங்கநகைகள் மற்றும் சுமார் 08 இலட்சம் ரூபாய் பணம் போன்றவை திருடப்பட்டுள்ளன.

ஆலயத்தினுள் பாதுகாப்பாக பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த நகைகள் மற்றும் பணமே திருட்டுப்போயுள்ளன. போலி திறப்புக்களை பயன்படுத்தி பூட்டை திறந்து பொருட்களை திருடியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 

இச்சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு