யாழ்ப்பாணம் - மண்டைதீவு படுகொலையின் 38ம் ஆண்டு நினைவேந்தல் இன்று..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் - மண்டைதீவு படுகொலையின் 38ம் ஆண்டு நினைவேந்தல் இன்று..

மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்ட 31 மீனவர்களின் 38ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று யாழில் அனுஷ்டிக்கப்பட்டது.

குறித்த நினைவுதின அஞ்சலி நிகழ்வானது யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட 31 மீனவர் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் இடம்பெற்றுது.

இந்த அஞ்சலி நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட மீனவர்களின் உறவினர்கள்,கிறிஸ்தவ மதகுருமார்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு கொல்லப்பட்ட மீனவர்களுக்காக வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் 

 அவர்களுக்கு அஞ்சலியும் செலுத்தினர். 1986ஆம் ஆண்டு ஜுன் மாதம் 10ஆம் திகதி குருநகர், இறங்குதுறையில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற மீனவர்கள் 31 பேரும் 

மண்டைதீவு கடலில் வைத்து கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு