தமிழ் பொலிஸாரை வற்புறுத்தி வெசாக் வழிபாட்டிற்கு அழைத்துச் சென்ற பொலிஸ் உயர் அதிகாரிகள்.. யாழ்.காங்கேசன்துறையில் சம்பவம்...

ஆசிரியர் - Editor I
தமிழ் பொலிஸாரை வற்புறுத்தி வெசாக் வழிபாட்டிற்கு அழைத்துச் சென்ற பொலிஸ் உயர் அதிகாரிகள்.. யாழ்.காங்கேசன்துறையில் சம்பவம்...

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள கெமுனு விகாரையில் நடைபெற்ற வெசாக் வழிபாட்டிற்காக தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்களை கட்டாயப்படுத்தி அழைத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

காங்கேசன்துறை குமார கோவில் வளாகத்தில் கெமுனு விகாரை அமைக்கப்பட்டுள்ளது. உயர் பாதுகாப்பு வலயமாக இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் குமார கோவில் இருந்தவேளை, ஆலயத்திற்கு முன்பாக இராணுவத்தினரால் கெமுனு விகாரை எந்தவிதமான அனுமதிகளும் பெறப்படாது நிர்மாணிக்கப்பட்டது. 

தற்போது குறித்த பகுதிகள் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டு அப்பகுதி மக்கள் மீள்குடியேறி குமார கோவிலில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் , குறித்த விகாரையில் வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன. 

இந்நிலையில் வெசாக் தினத்தில் கொழும்பில் இருந்து பிக்கு ஒருவர் அழைத்து வரப்பட்டு , தமிழில் பிரித் ஓதி வழிபாடுகள் இடம்பெற்றன. 

குறித்த வழிபாட்டில் காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடமையாற்றும் தமிழ் பொலிஸார் கலந்து கொள்ள வேண்டும் என பொலிஸ் உயர் மட்டத்தினால் கட்டளை பிறப்பிக்கப்பட்டு , 

தமிழ் பொலிஸார் வலுக்கட்டாயமாக தமிழில் பிரித் ஓதி வழிபாட்டிபுறுல் ஈடுப்பட வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு