கொக்குவில்ப் பகுதியில் யாழ் பல்கலை மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி

ஆசிரியர் - Admin
கொக்குவில்ப் பகுதியில் யாழ் பல்கலை மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையை தலைமுறைகளிற்கு கடத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறுதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் கொக்குவில் இந்துக் கல்லூரியை அண்மித்த பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை வாரத்தினை முன்னிட்டு தினமும் பல்வேறுபட்ட இடங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இணைந்த சுகாதாரக் கற்கைகள் பீட மாணவர்களினால் குறித்த கஞ்சி பரிமாறும் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

2009 ஆம் ஆண்டு சிறிலங்கா ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைப் போரின் போது தமிழ் மக்களின் உயிர் காத்த உணவான முள்ளிவாய்க்கால்க் கஞ்சி தமிழர் தாயகமெங்கும் இந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தில் பல்வேறுபட்ட தரப்பினராலும் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு