யாழ்ப்பாணம் வருகிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் வருகிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க..

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இம்மாதம் இறுதி வாரத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிய வருகிறது. 

கிளிநொச்சி மாவட்டத்திற்கு வருகை தரும் ஜனாதிபதி கிளிநொச்சி மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வைத்தியசாலை கட்டிடம் ஒன்றை திறந்து வைத்த பின்னர் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையிலும் புதிதாக அமைக்கப்பட்ட கட்டடம் ஒன்றை ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.அத்துடன் யாழ்ப்பாண விஜயத்தின்போது 

வலி வடக்கு பகுதியில் ஒட்டகப்புலத்துக்குச் செல்லும் பிரதான பாதையினையும் உத்தியோபூர்வமாக மக்களிடம் கையளிக்கும் நிகழ்வும் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு