யாழ்.திருநெல்வேலியில் 3 உணவகங்களுக்கு சீல்!

ஆசிரியர் - Editor I
யாழ்.திருநெல்வேலியில் 3 உணவகங்களுக்கு சீல்!

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய மூன்று உணவகங்கள் நீதிமன்ற உத்தரவில் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. 

பொதுச் சுகாதார பரிசோதகரின் திடீர் சோதனையின்போது , திருநெல்வேலி பகுதியில் மூன்று உணவகங்கள் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்துள்ளன. 

அது தொடர்பில் சுகாதார பரிசோதகரால் உணவக உரிமையாளர் அறிவுறுத்தப்பட்டு , குறைகளைச் சீர் செய்யக் கால அவகாசம் வழங்கப்பட்டது. 

இந்நிலையில், மறுபரிசோதனைக்காக திங்கட்கிழமை (29) குறித்த உணவகத்திற்கு பொதுச் சுகாதார பரிசோதகர் சென்ற போது குறைகள் சீர் செய்யப்படாததை அடுத்து, 

மூன்று உணவக உரிமையாளர்களுக்கும் எதிராக யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது உரிமையாளர்கள் குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து, 

அவர்களுக்கு 2 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த மன்று , உணவகச் சுகாதார சீர்கேடுகளை நிவர்த்தி செய்யும் வரையில் உணவகங்களுக்குச் சீல் வைக்குமாறு உத்தரவிட்டது. 

நீதிமன்ற உத்தரவை அடுத்து மூன்று உணவகங்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு