மனதை உதைக்கும் மயக்கும் கால்பந்து.. கண்ணை மூடி ரசிக்கவும்!
உலகக் கோப்பைக் கால்பந்து தொடரின் கிளைமேக்ஸ் நெருங்கி வருகிறது. கால்பந்து ரசிகர்களின் உற்சாகமும் கூடிக் கொண்டே போகிறது. கால்பந்துக்கு இருக்கும் கிரேஸ் வேறு எந்த விளையாட்டுக்கும் இருப்பதாக தெரியவில்லை. அதிலும் உலகக் கோப்பை வந்து விட்டால் போதும் ஒவ்வொரு போட்டியும் தூள் பறக்கும்.
பீலே, பிளாட்டினி போன்ற ஜாம்பவான்கள் ஓடி உதைத்த களங்களுக்கு நிகரான போட்டிகளை இன்று ரசிகர்கள் காண முடியாமல் போனாலும் கூட இன்றைய காலகட்டத்துக்கேற்ற மின்னல் வீரர்கள் ரசிகர்களை மயக்கிக்கொண்டுதான் உள்ளனர். கால்பந்தின் மகத்துவத்தையும், அது அத்தனை சமுதாயங்களையும், இனங்களையும் இணைக்கும் அற்புதத்தையும் நேரில் கண்டால்தான் உணர முடியும். இசைக்கும், விளையாட்டுக்கும் மட்டுமே உரித்தான குணாதிசயம் இது. மாஸ்கோவைச் சேர்ந்தவர் அலெக்ஸ் சோலோவியவ். இவர் ஒரு சுயேச்சையான குறும்பட இயக்குநர். கால்பந்து ஜூரம் குறித்து ஒரு குறும்படத்தை வெளியிட்டுள்ளார். மாஸ்கோ நகர வீதிகளை கலகலப்பாக்கி வரும் ரசிகர்களை மட்டும் படம் பிடித்துள்ளார். அழகான பின்னணி இசையுடன், ரசிகர்களின் உற்சாகம், முக பாவனைகள், ஆர்வம் உள்ளிட்டவற்றை படமாக்கி வெளியிட்டுள்ளார்.