SuperTopAds

நாடாளுமன்ற தேர்தலில் கள்ள வாக்குபோட்டவர், முறைகேடுகள் செய்து தலைவராகியும் இன்னும் பதவியேற்க முடியாதவர் என்னை சண்டியன் என்கிறார்...

ஆசிரியர் - Editor I
நாடாளுமன்ற தேர்தலில் கள்ள வாக்குபோட்டவர், முறைகேடுகள் செய்து தலைவராகியும் இன்னும் பதவியேற்க முடியாதவர் என்னை சண்டியன் என்கிறார்...

நாடாளுமன்ற தேர்தலில் கள்ள வாக்கு போட்டவர், தனது கட்சி தேர்தலில் முறைகேடுகள் செய்து தலைவராகி , இன்னமும் தலைவர் பொறுப்பு எடுக்க முடியாத நிலையில் உள்ளவர், நான் சண்டித்தனம் காட்டுகிறேன் என்கிறார். 

அவர் என்னை விமர்சிக்க தகுதியற்றவர் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

நாடாளுமன்ற தேர்தலில் 72 கள்ள வாக்குகளை போட்டேன் என வெளிப்படையாக கூறியவர் , தனது கட்சியின் தலைவர் தேர்தலிலும் முறைகேடுகளை செய்து தலைவராக தெரிவாகியும் தலைவர் பொறுப்பை ஏற்க முடியாத நிலையில் காணப்படும் ஒருவர் என்னை விமர்சிக்க தகுதி அற்றவர். 

மற்றையவர் ஒருவர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர். கிளிநொச்சியில் கந்து வட்டி என்றாலே அவரின் பெயரை தான் சொல்வார்கள். அவரும் என்னை விமர்சிக்க தகுதியற்றவர். 

கொரோனா இடர் காலத்தில் கிளிநொச்சியில் உள்ள இரும்பு பாலங்களின் இரும்புகளை களவாடி விற்றவர்களின் விமர்சனங்களை நான் பெரிது படுத்தவில்லை. 

ஆனால் , அன்று இளைஞர்கள் மத்தியில் வன்முறை சிந்தனைகளை விதைத்து , அவர்களை உசுப்பேற்றி வன்முறைகளில் ஈடுபட வைத்தவர்கள் தமிழரசு கட்சியினர். 

"மாற்று கருத்துள்ளோருக்கு இயற்கை மரணம் இல்லை" என இளைஞர்கள் மத்தியில் குரோதத்தை ஏற்படுத்தியவர்கள் தமிழரசு கட்சியினர். இன்றும் அவர்கள் அதனையே செய்து வருகின்றனர் என தெரிவித்தார்.