யாழ்.நெடுந்தீவில் காற்றாலை மற்றும் சோளார் மின் உற்பத்தி திட்டம்! இன்று பூமி பூஜையுடன் ஆரம்பம்...

ஆசிரியர் - Editor I
யாழ்.நெடுந்தீவில் காற்றாலை மற்றும் சோளார் மின் உற்பத்தி திட்டம்! இன்று பூமி பூஜையுடன் ஆரம்பம்...

தீவகத்தில் முன்னெடுக்கப்படவுள்ள சூரிய ஒளி மின்சாரம் மற்றும் காற்றாலை மின்சாரம் உற்பத்திக்கான வேளித்திட்டத்தின் மற்றுமொரு முன்னேற்பாடாக இன்று நெடுந்தீவிலும் பூமி பூஜை நிகழ்வு (07.04.2024) இடம்பெற்றது.

இலங்கை இந்திய அரசுகள் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டுக்கு அமைய இந்திய தனியார் நிறுவனத்தின் நிதி பங்களிப்புடன் முன்னெடுக்கப்படும் இந்த பாரிய மின்சார திட்டமானது கடந்தவாரம் அனலைதீவில் முன்னெடுக்கப்பட்டது.

இன்நிலையில் சூரிய ஒளி மின்சாரம் மற்றும் காற்றாலை மின்சாரம் உற்பத்திக்கான காற்றாலை அமையவுள்ள நெடுந்தீவில் இந்திய நிறுவன மின் பொறியியலாளர் தினேஷ் பாண்டியன் முன்னிலையில் "பூமி பூஜை" நிகழ்வு இன்று காலை இடம்பெற்றமை முறிப்பிடத்தக்கது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு