ரசிகர்களுக்கு விருந்து படைக்க காத்திருக்கும் இரண்டு இறுதி போட்டிகள்
உலக கோப்பை கால்பந்து போட்டியின் லீக் போட்டிகள் மற்றும் நாக் அவுட் சுற்று போட்டிகள் முடிந்துள்ளன. இன்று முதல் காலிறுதி போட்டிகள் நடைபெற உள்ளன. இதையடுத்து அரையிறுதி போட்டிகளும் அடுத்த வாரம் இறுதி போட்டியும் நடக்கவுள்ளது.
இதேபோல் பிரபலமான டென்னிஸ் போட்டியான விம்பிள்ட்ன் டென்னிஸ் போட்டிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன. இதன் இறுதிப் போட்டி அடுத்த வாரம் இறுதியில் நடைபெறவுள்ளது.
இந்த மாபெரும் இரண்டு இறுதி போட்டிகளும் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் மிகையில்லை.
இந்த இறுதி போட்டிகளை ஒளிபரப்ப அனைத்து தொலைக்காட்சிகளும் முழு வீச்சில் ஏற்பாடுகளை தயார் செய்து வருகின்றன. பி.பி.சி. தொலைக்காட்சி நிறுவனமும் தனது நிகழ்ச்சிகளை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளது.
விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டி குறைந்த பட்சம் 2 மணி 45 நிமிடங்கள் நடைபெறும். உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி போட்டியும் குறைந்தது 2 மணி நேரம் நடைபெறும் என்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ரஷியாவில் உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்றாலும் லண்டனில் வசிப்பவர்கள் தங்களது இங்கிலாந்து அணி இறுதி போட்டியில் நுழைய வேண்டும் என்பதற்காக காத்திருக்கின்றனர்.
எது எப்படியோ இரண்டு மெகா இறுதிப் போட்டிகளை பார்த்து ரசிப்பதற்கு ரசிகர்கள் தயாராக உள்ளனர்.