முருகன், பயஸ், ஜெயக்குமாரிடம் தீவிர விசாரணை, நீதிமன்றில் முற்படுத்தப்படலாம் என தகவல்....

ஆசிரியர் - Editor I
முருகன், பயஸ், ஜெயக்குமாரிடம் தீவிர விசாரணை, நீதிமன்றில் முற்படுத்தப்படலாம் என தகவல்....

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள முருகன் உள்ளிட்ட மூவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

குறித்த மூவரும் சட்ட விரோதமாக கடவுச்சீட்டு இன்றி இந்தியா சென்றமை தொடர்பில் வழக்கு தாக்கல் செய்ய தீர்மானத்திருப்பதாக தமிழக சட்டத்தரணி புகழேந்திக்கு விசாரணையாளர்கள் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 

அவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்படும் பட்சத்தில் குறித்த மூவரும் நீர்கொழும்பு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் நீதிமன்றின் ஊடாக பிணையில் அழைத்துவர முடியும் என சட்டத்தரணி புகழேந்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், சட்டத்தரணி சுகாஸ், வேலன் சுவாமிகள் மற்றும் முருகனின் தாயார் உள்ளிட்டவர்கள் விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு