முருகன், பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் நாடு திரும்பினர்! விமான நிலையத்தில் விசாரணை...

ஆசிரியர் - Editor I
முருகன், பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் நாடு திரும்பினர்! விமான நிலையத்தில் விசாரணை...

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து, விடுதலை செய்யப்பட்ட முருகன், ஜெயகுமார், ராபர்ட் பயஸ் ஆகிய மூவரும் 35 ஆண்டுகளின் பின்னர் இன்று(03) இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

திருச்சி சிறப்பு முகாமில் இருந்து இன்று(03) காலை அழைத்துவரப்பட்ட குறித்த மூவரும் சென்னை விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

தற்காலிக விசாவில் குறித்த மூவரும் நாட்டிற்கு வருகை தருவதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இதனிடையே, முருகனை அவரது துணைவியார் நளினி சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்து வழியனுப்பினார்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கு தொடர்பில் நீதிமன்றில் ஆஜரான தமிழக சட்டத்தரணி புகழேந்தி பாண்டியனும் இவர்களுடன் இலங்கைக்கு பயணிக்கின்றார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 3 தசாப்தங்களாக சிறையில் இருந்த பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும்

2022ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு