யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா கொலையுடன் தொடர்புடைய குற்றவாளி ஒருவர் சிறையில் பலி...

ஆசிரியர் - Editor I
யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா கொலையுடன் தொடர்புடைய குற்றவாளி ஒருவர் சிறையில் பலி...

யாழ்ப்பாணம் - புங்குடுத்தீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். 

37 வயதான பூபாலசிங்கம் தவக்குமார் என்பவர் கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் சுகயீனம் காரணமாக நேற்றைய தினம் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சில நிமிடங்களிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

அவர் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில், சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு