தந்தை செல்வாவின் 126வது ஜனன தினத்தை முன்னிட்டு சமூக சேவையாளர்கள் 20 பேருக்கு “தந்தை செல்வா” விருது வழங்கி கௌரவிப்பு..

ஆசிரியர் - Editor I
தந்தை செல்வாவின் 126வது ஜனன தினத்தை முன்னிட்டு சமூக சேவையாளர்கள் 20 பேருக்கு “தந்தை செல்வா” விருது வழங்கி கௌரவிப்பு..

தந்தை செல்வாவின் 126 ஆவது ஜனனதின விழாவும், விருது வழங்கும் நிகழ்வும் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வழக்கம்பரை அம்மன் ஆலய முன்றலில் இருந்து விருந்தினர்கள் மற்றும் விருது பெறுபார்கள் பாரம்பரிய முறைப்படி மேளதாளங்களுடன் அழைத்து வரப்பட்ட பின்னர் யாழ்.வலிகாமம் மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் வடமாகாண தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது ஊடகத்துறை சார்பில் தீம்புனல் பத்திரிகையின் ஆரியர் ஏ.ரவிவர்மா, ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியர் ஏ.தேவராஜன், சக்தி ரி.வி தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் வி.கஜீபன், யாழ்.தினக்குரல் பத்திரிகையின் உதவி ஆசிரியர் க.ஹம்சனன், டான் ரி.வி தொலைக்காட்சியின் உதவி ஆசிரியர் இ.நிர்மல் உள்ளிட்டோருக்கும், 

வைத்திய துறை மற்றும் சமுகசேவை உள்ளிட்ட பல துறைகளில் சாதித்த 20 பேருக்கு ''தந்தை செல்வா விருது'' வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.இதன் போது தெரிவு செய்யப்பட்ட 200 பேருக்கு கண்ணாடி வில்லைகளும் வழங்கி வைக்கப்பட்டது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு