SuperTopAds

யாழ்.தெல்லிப்பழை யூனியன் கல்லுாரி இல்ல விளையாட்டு போட்டியால் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மீது விசாரணை!

ஆசிரியர் - Editor I
யாழ்.தெல்லிப்பழை யூனியன் கல்லுாரி இல்ல விளையாட்டு போட்டியால் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மீது விசாரணை!

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி விளையாட்டு போட்டி நிகழ்வில் கார்த்திகைப் பூ மற்றும் யுத்த கவன வாகனங்கள் போன்று இல்ல அலங்காரம் செய்தமை தொடர்பில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

நேற்று குறித்த பாடசாலை விளையாட்டுப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போதே அங்கு சென்ற பொலிஸார் மற்றும் இராணுவ புலனாய்வாளர்கள் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், இல்லத் தலைவர்கள் மற்றும் அலங்காரங்கள் செய்த மாணவர்களை தீவிர விசாரணைக்கு உட்படுத்தியதோடு, 

இன்று காலை 8 மணியளவில் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராகுமாறும் உத்தரவிட்டுச் சென்றுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:- தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வலுனர் போட்டி நிகழ்வுகள் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. 

இந்நிகழ்விற்கான குறித்த பாடசாலையில் உள்ள இல்லங்கள் ஒவ்வொன்றினையும் மாணவர்கள் வெவ்வேறு விதங்களில் வடிவமைத்திருந்தனர். இதன்படி அங்கு அமைக்கப்பட்ட ஒரு இல்லம் கார்த்தினைபூ போன்றும், மற்றொன்று யுத்த கவச வாகனம் போன்றும் அமைக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் அங்கு விளையாட்டுப் போட்டி ஆரம்மான சில நிமிடங்களில் குறித்த இரு இல்லங்களின் அலங்காரம் தொடர்பான புகைப்படங்கள் வலைத்தளங்களில் தீவிரமாக பரவியிருந்தன. இந்நிலையில் விளையாட்டுப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போதே பாடசாலைக்குள் தெல்லிப்பளை பொலிஸார், 

பொலிஸ் மற்றும் இராணுவ புலணாய்வாளர்கள் சென்று மேற்குறித்த இரு இல்லங்களின் அலங்காரம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர்.இதன்படி உடனடியாக பாடசாலையின் அதிபரின் அறைக்கு இல்லங்களுக்கு பொறுப்பான ஆசிரியர், இல்லத்திற்கு பொறுப்பான மாணவர் 

மற்றும் குறித்த இரு இல்லங்களின் மாணவர்கள் வரவளைக்கப்பட்டு, அவர்களிடம் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. இதுமட்டுமல்லாமல் குறித்த இரு இல்லங்களுக்கு பொறுப்பான ஆசிரியர், பொறுப்பான மாணவர்கள், இல்லத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அலங்காரங்களை செய்த மாணவர்களுடைய பெயர் விபரங்களையும் பொலிஸாரும், 

இராணுவப் புலனாய்வாளர்களும் பெற்றுள்ளனர். பாடசாலையின் விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே, அதனை குறுக்கிட்டு விசாரணைகள் செய்த பொலிஸார், பாடசாலை அதிபர், மேற்குறிப்பிட்ட இரு இல்லங்களுக்கு பொறுப்பான ஆசிரியர், 

பொறுப்பான மாணவர்கள் மற்றும் இல்ல அலங்காரம் செய்த மாணவர்களையும் தத்தமது பொற்றோர்களுடன் நாளை (இன்று ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறும் அறிவுறுத்திச் சென்றுள்ளனர்.