யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் ஆரம்பமானது...

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் ஆரம்பமானது...

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் அபிவிருத்தி குழு கூட்டம் கடற்றொழில் அமைச்சரும் மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வடக்கின் ஆளுநரும் மாவட்டத்தின் அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவருமான திருமதி சார்ள்ஸின் பிரசன்னத்துடன் இன்றையதினம் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.

யாழ் மாவட்ட பதில் அரச அதிபர் பிரதீபனின் ஒழுங்கு படுத்தலில் ஆரம்பமான மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில், நடப்பு ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தின் ஊடக மாவட்டத்துக்கு ஒதுக்கப்படும் நிதி அதனூடாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஆராயப்படவுள்ளன.

மேலும் துறை ரீதியான முன்னேற்ற மீளாய்வில் சேவைத்துறை சார்ந்த முன்னேற்றங்கள், அவற்றின் தீர்வுகள் குறித்தும் ஆராயப்படவுள்ளன. இதில் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் வடக்கு மாகாண அவைத் தலைவர் கே.வி.சிவஞானம், பாதுகாப்பு துறைசார் அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலக பதவிநிலை அதிகாரிகள்,

 உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு