பிறந்து 28 நாட்களேயான சிசு பால் புரைக்கேறி உயிரிழப்பு!

ஆசிரியர் - Editor I
பிறந்து 28 நாட்களேயான சிசு பால் புரைக்கேறி உயிரிழப்பு!

பால் புரைக்கேறியதில் 28 நாள் சிசுவொன்று யாழில் உயிரிழந்துள்ளது.யாழ்ப்பாணத்தை சேர்ந்த சசிக்குமார் பிரதீபா எனும் சிசுவே உயிரிழந்துள்ளது. தயார் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை சிசுவுக்கு பால் ஊட்டி விட்டு , குழந்தையை படுக்க வைத்துள்ளார். 

சிறிது நேரத்தில் குழந்தை அசைவின்றி காணப்படுவதனை அவதானித்து , குழந்தையை எழுப்பியபோது குழந்தை மயக்கமான நிலையில் காணப்பட்டமையால் ,குழந்தையை யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டது என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு