ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம்! 278 ஏக்கர் காணி மக்களிடம் வழங்கப்படுகிறது...

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம்! 278 ஏக்கர் காணி மக்களிடம் வழங்கப்படுகிறது...

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி பலாலியில் இராணுவ கட்டுப்பாட்டில் கடந்த 33 வருடங்களாக காணப்பட்ட 278 ஏக்கர் விவசாய காணிகளை அதன் உரிமையாளர்களிடம் மீள கையளிக்கவுள்ளார். 

பலாலியில் நடைபெறும் நிகழ்விலேயே காணி கையளிப்பு இடம்பெறவுள்ளது. அத்துடன் பலாலியில் மற்றுமொரு நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ள ஜனாதிபதி, யாழ்ப்பாணம் , கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் அரச காணிகளில் குடியிருப்பேருக்கு காணி உறுதியை வழங்கி வைக்கவுள்ளார். 

அதேவேளை விவசாயிகளின் நலன்களுக்காக விவசாய திணைக்களத்தால் , உருவாக்கப்பட்ட மென்பொருளின் அங்குரார்ப்பண நிகழ்விலும் கலந்து கொள்ளவுள்ளார். அத்துடன் வெள்ளிக்கிழமை மாலை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள அவசர சிகிச்சை பிரிவின் கட்டடத்தை திறந்து வைக்கவுள்ளார். 

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள நான்கு நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவே ஜனாதிபதி யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு