இன நல்லிணக்கத்திற்கு குந்தகம், யாழ்.பல்கலைகழகத்திடமும் விசாரணை...!!

ஆசிரியர் - Editor I
இன நல்லிணக்கத்திற்கு குந்தகம், யாழ்.பல்கலைகழகத்திடமும் விசாரணை...!!

இன நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் முகமாக , தமிழ் இளைஞர்களை எழுச்சி கொள்ள வைக்கும் வகையில் பட்டி மன்றில் கருத்து தெரிவித்தமை தொடர்பில் யாழ்.பல்கலைக்கழகத்திடம் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிடம் கல்வி அமைச்சு கோரியுள்ளது. 

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் 10ஆம் திகதி இடம்பெற்ற " தமிழ் வேள்வி - 2023" என்ற நிகழ்வில் , "ஈழ தமிழ் சமுதாயத்தில் தற்போது இளைஞர் அமைப்புக்களின் எழுச்சி , அவசியமானதா? அவசியமற்றதா?" எனும் தலைப்பில் இடம்பெற்ற பட்டிமன்றத்தில் நடுவராக கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் அதிபர் ச.லலீசன் கலந்து கொண்டிருந்தார். 

அதன் போது , தமிழ் இளைஞர்களை எழுச்சி கொள்ள தூண்டும் வகையில் கருத்துக்களை தெரிவித்ததாகவும் , இன நல்லிணக்கத்தை குழப்பும் வகையிலான கருத்துக்களை தெரிவித்ததாக கல்வி அமைச்சுக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் கல்வி அமைச்சின் ஒழுக்காற்று பிரிவுக்கான மேலதிக செயலர், சீ.சமந்தி வீரசிங்க, 

கல்வி அமைச்சின் ஆசியர் பயிற்சி கல்வி பிரிவின் பணிப்பாளரிடம் விசாரணைகளை மேற்கொண்டு , நடவடிக்கை எடுக்குமாறும் , எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, தனக்கு விளக்கமான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த பட்டிமன்றம் யாழ்.பல்கலைக்கழகத்தில் நடத்துவதற்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது? உள்ளிட்டவை தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் விசாரணைகளை முன்னெடுக்கிடுமாறும் கல்வி அமைச்சு , மானிய ஆணைக்குழுவிற்கு பணித்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு