பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் - பொலிஸ்மா அதிபர் யாழ்ப்பாணம் விஜயம்...

ஆசிரியர் - Editor I
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் - பொலிஸ்மா அதிபர் யாழ்ப்பாணம் விஜயம்...

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்ட நிகழ்வு ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் யாழ்ப்பாண பொலிஸ் பிரிவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்ளிட்டவர்கள் உரையாற்றியிருந்தனர்.

அத்தோடு பொலிஸாரால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு சினைவுச் சின்னமாக வாள் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க, பொலிஸ் அதிகாரிகள், யாழ்ப்பாணம் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன், பிரதேச செயலாளர்கள், 

கிராம உத்தியோகத்தர்கள், மத குருமார்கள், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள சமுக பொலிஸ் குழுக்களின் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு