சாந்தனின் வித்துடல் எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டது!

ஆசிரியர் - Editor I
சாந்தனின் வித்துடல் எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டது!

சாந்தனின் புகழுடல் வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்ல மயான வளாகத்தில் பெருமளவிலான மக்களின் கண்ணீர் கதறலுடன் விதைக்கப்பட்டது.

இந்தியாவின் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு முப்பது வருடங்களுக்கு மேலாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டபோதும் தொடர்ந்து சிறப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டு தாயகம் திரும்ப இருந்த நிலையில் சாந்தன் திடிரென உயிரிழந்திருந்தார்.

சாந்தனின் உயிரிழப்பு தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உள்ள ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருந்தது.

குறிப்பாக உயிரோடு வருவாரென எதிர்பார்த்திருந்த நிலையில் உயிரிழந்த நிலையில் தாயகத்திற்கு கொண்டு வரப்பட்டு பல்வேறு இடங்களிலும் அலைகடலெனத் திரண்டு கண்ணீர் மல்க மக்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இந்நிலையில் உடுப்பிட்டியில் உள்ள அவரது சகோதரியின் வீட்டில் இறுதிக் கிரியைகள் நடைபெற்று தமிழீழ விடுதலைப் புலிகளின்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பெருமளவிலான மக்கள் புடைசூழ நல்லடக்கத்திற்காக உடல் தூயிலுமில்லத்திற்கு எடுத்துவரப்பட்ட போது வீதிகளில் திரண்டு மக்கள் தமது அஞ்சலியை செலுத்தினர்.

இறுதியாக எள்ளங்குளம் மாவீர்ர் துயிலுமில்லத்தில் உற்றார் உறவினர் நண்பர்கள் போராளிகள் எனப் பெருமளவிலானோரின் கண்ணீர் கதறலுடன் சாந்தனின் உடலுக்கு விபூதி, சந்தனம் குங்குமம்,பன்னீரில் அபிசேகம் விதைக்கப்பட்டது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு