பொதுச்சுகாதார பரிசோதகர் சுட்டுக்கொலை!

ஆசிரியர் - Editor I
பொதுச்சுகாதார பரிசோதகர் சுட்டுக்கொலை!

எல்பிட்டிய, பத்திராஜ வத்த பகுதியில் திங்கட்கிழமை (26) சுட்டுக் கொல்லப்பட்ட பொது சுகாதாரப் பரிசோதகர் டபிள்யூ.டி. ரொஷான் புஷ்பகுமார என்பவர் தனது இளைய மகனை முதலாம் ஆண்டுக்கு அனுப்புவதற்கு தயாராகிக்கொண்டிருந்தபோதே கொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கரந்தெனிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நிர்வாக பொது சுகாதார பரிசோதகராக பணியாற்றிய 51 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே சுட்டுக் கொல்லப்பட்டவராவார். எல்பிட்டிய பதில் நீதிவான் வஜிரா பொன்னம்பெரும சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டார்.

கொலை செய்யப்பட்ட புஷ்பகுமாரவின் மனைவி ஆசிரியை என்பதுடன், அவர் எல்பிட்டிய எல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலைக்கு அதிகாலையில் சென்றுள்ளார்.துப்பாக்கிச் சூடு நடந்தபோது அவரது தாயும் இளைய மகன்களும் வீட்டில் இருந்தனர். இளைய மகன் இன்று முதலாம் ஆண்டுக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்தபோதே 

இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு