சமூக வலைத்தளங்களில் தன்னை ஒரு ஆணாக சித்தரித்து 15 வயது சிறுமியின் நிர்வாண புகைப்படங்களை பெற்று மிரட்டிவந்த இளம்பெண் கைது...

ஆசிரியர் - Editor I
சமூக வலைத்தளங்களில் தன்னை ஒரு ஆணாக சித்தரித்து 15 வயது சிறுமியின் நிர்வாண புகைப்படங்களை பெற்று மிரட்டிவந்த இளம்பெண் கைது...

சமூக வலைத்தளங்களில் தன்னை ஒரு ஆணாக காட்டிய 18 வயதான பெண் ஒருவர் 15 வயதான சிறுமியுடன் போலியான காதல் உறவை ஏற்படுத்தி அவரிடமிருந்து நிர்வாண புகைப்படங்களை பெற்று அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கலென்பிந்துனுவெவ பிரதேசத்தை சேர்ந்த 19 வயது யுவதியாவார். இவர் சமூக வலைத்தளங்களில் அறிமுகமான மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த 15 வயது சிறுமியிடம் தன்னை இளைஞராக காண்பித்து கடந்த ஒரு வருட காலமாக காதல் உறவில் ஈடுபட்டிருந்துள்ளார்.

இந்நிலையில் இவர் இளைஞர் ஒருவரின் குரலில் தொலைபேசி மூலம் சிறுமியுடன் தினமும் தொடர்பு கொண்டு வந்துள்ளார். இந்த சிறுமி தனது காதலனாக நினைக்கும் சந்தேக நபரான யுவதியிடம் தனது நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் இந்த யுவதி , சிறுமியை நேரில் சந்திக்க வருமாறு அழைத்துள்ளார். ஆனால் இந்த சிறுமி , யுவதியை நேரில் சந்திப்பதை தவிர்க்க முற்பட்டுள்ளார். இதனை அறிந்து கொண்ட யுவதி தன்னை சந்திக்க வரவில்லை என்றால் சிறுமியின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவு செய்து விடுவதாக கூறி அச்சுறுத்தியுள்ளார்.

ஆனாலும் இந்த சிறுமி, யுவதியை நேரில் சந்திப்பதை தவிர்க்க முற்பட்டதால் இந்த யுவதி சிறுமியின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்ததையடுத்து சந்தேக நபரான யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கைது செய்யப்பட்டபோதே அவர் ஆண் இல்லை பெண் ஒருவர் என பாதிக்கப்பட்ட சிறுமி அறிந்து கொண்டுள்ளார். இதனையடுத்து சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் மார்ச் மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு