யாழ்.தீவகத்தில் தனியார் பேருந்து சாரதியின் அசண்டையீனத்தால் பெண் ஒருவர் உயிரிழந்த விவகாரம், வழித்தட அனுமதியை நிறுத்திய போக்குவரத்து அதிகாரசபை...

ஆசிரியர் - Editor I
யாழ்.தீவகத்தில் தனியார் பேருந்து சாரதியின் அசண்டையீனத்தால் பெண் ஒருவர் உயிரிழந்த விவகாரம், வழித்தட அனுமதியை நிறுத்திய போக்குவரத்து அதிகாரசபை...

சாரதியின் அவசரத்தால் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து , குறித்த பேருந்தின் வழித்தட அனுமதி வடமாகாண போக்குவரத்து அதிகார சபையினால் இரத்து செய்யப்பட்டள்ளது. 

யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த திங்கட்கிழமை பேருந்தினால் பெண்ணொருவர் இறங்க முற்பட்ட வேளை , சாரதி அவசரமாக பேருந்தினை நகர்த்திமையால், அப்பெண் விழுந்து படுகாயமடைந்தார். 

அப்பெண்ணை மீட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஊர்காவற்துறை பொலிஸார் 

சாரதியை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து , நீதிமன்ற உத்தரவில் சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இந்நிலையில் குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் 

வடமாகாண போக்குவரத்து அதிகார சபையினர் விசாரணைகளை முன்னெடுத்து, பேருந்தின் வழித்தட அனுமதியினை இரத்து செய்துள்ளனர். பேருந்துகள் போட்டி போட்டு ஓடுவதனாலையே அதிகளவான விபத்துகள் இடம்பெற்று வருவதாகவும், 

அவ்வாறு அதிகவேகமாக பேருந்துகளை செலுத்தும் சாரதிகள் தொடர்பில், யாழ்.மாவட்ட செயலக வளாகத்தில் உள்ள வடமாகாண போக்குவரத்து அதிகார சபையினருக்கு முறையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு