யாழ்.வடமராட்சி கிழக்கில் வெகு சிறப்பாக நடந்த கரைவலை மீன்பிடி தின நிகழ்வு...

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி கிழக்கில் வெகு சிறப்பாக நடந்த கரைவலை மீன்பிடி தின நிகழ்வு...

யாழ்ப்பாணம் - நாகர்கோவில் பெரும் கடற்கரையில் கரைவலை மீன்பிடி தின நிகழ்வு நேற்று (11) சம்பிரதாயபூர்வமாக  இடம்பெற்றது. 

குறித்த மீனவ சம்மட்டிமார், கடற்றொழிலாளர்கள், நாளாந்தம் கூலி வேலை செய்யும் குடும்ப மீனவர்கள் ஒன்றிணைந்து கரைவலை மீன்பிடி தின நிகழ்வை கொண்டாடியுள்ளனர். 

மீனவ சமூகத்தினர் ஒன்பது நாட்களாக  நாகர்கோவில் நாக தம்பிரானுக்கு விரதம் இருந்து, சமய ரீதியான நிகழ்வினை நிறைவு செய்த பின்னர், கரைவலை மீன்பிடி தினத்தை கடைபிடித்தனர்.

கரைவலை மீன்பிடி முறையில் பிடிக்கப்பட்ட மீன்களை கரைக்கு எடுத்து வந்து  வாடிக்கையாளர்களுக்கான நாள் விற்பனை சந்தைப்படுத்தலில் மீனவ சம்மாட்டிமார், கடற்றொழிலாளர்கள், நாளாந்தம் கூலி வேலை செய்யும் பரம்பரை மீனவர்கள் ஆர்வத்தோடு ஈடுபட்டனர்.

 

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு