இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று ஆட்டங்களைக் கொண்ட ஒரு நாள் தொடர் இன்று ஆரம்பமாகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் பகலிரவு ஆட்டமாக இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது
இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று ஆட்டங்களைக் கொண்ட ஒரு நாள் தொடர் இன்று ஆரம்பமாகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் பகலிரவு ஆட்டமாக இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது.
இந்திய அணியின் தலைவரான கோக்லிக்கு கட்டாய ஓய்வு வழங்கப்பட்டதன் பின்னர் ரோகித் சர்மா தலைவராகப்பட்டார். இதனால் ரோகித் சர்மாவின் தலைமை மீதும் அதிகளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கை அணியின் தலைமைப் பொறுப்பில் இருந்து தரங்க நீக்கப்பட்டு திசர பெரேரா தலைவராக்கப்பட்டதன் பின்னர் இலங்கை அணி எதிர்கொள்ளும் முதலாவது ஆட்டமாக இது அமைந்துள்ளது.
சிம்பாப்வேக்கு எதிரான தொடரின் பின்னர் இலங்கை அணி தொடர்ச்சியாக 12 ஒருநாள் ஆட்டங்களில் தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்தத் தோல்வியில் இருந்து விடுபட இந்திய அணிக்கு எதிரான தொடரை இலங்கை எப்படிப் பயன்படுத்தப்போகிறது என்பதுதான் தற்போதுள்ள மிகப்பெரும் கேள்வி.
‘‘இலங்கை அணி தொடர்ச்சியான தோல்வியில் இருந்து விடுபடுவதற்கு ஒரேயொரு ஆட்டத்திலேனும் வெற்றிபெறுவது மிகவும் அவசியமானது.
அந்த முதலாவது வெற்றியை (தொடர் தோல்வியைத் தவிர்க்கும் வெற்றியை) எதிர்பார்த்துள்ளோம்’’ என்று இலங்கை அணியின் தலைவர் திசர பெரேரா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது