யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எதிர்வரும் மார்ச் மாதம் தொடக்கம் கோம்பயன்மணல் மயானத்தில் தகனம் செய்ய திட்டம்!

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எதிர்வரும் மார்ச் மாதம் தொடக்கம் கோம்பயன்மணல் மயானத்தில் தகனம் செய்ய திட்டம்!

யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்கான எரியூட்டி எதிர்வரும் மார்ச் மாதம் முதல் ஆரம்பமாகும் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்திய மூர்த்தி தெரிவித்துள்ளார். 

வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்ட கோம்பயன் மணல் மயானத்தில், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் 40 மில்லியன் ரூபாய் நிதி பங்களிப்பில் எரியூட்டி நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. 

அதன் பணிகள் பூர்த்தியாகும் நிலையை அடைந்துள்ளது. எதிர்வரும் வரும் மார்ச் மாதம் முதல் எரியூட்டி தொழிற்பட தொடங்கும் என பணிப்பாளர் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு