உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு: முதலிடத்தை பிடித்த நாடுகள்!
194 நாடுகளுக்கு விசா இல்லாத அனுமதி பெற்ற நாடுகளின் பட்டியலை அண்மையில் ஹென்சி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் வெளியிட்டுள்ளது. அதன்படி 194 நாடுகளுக்கு விசா இல்லாத அணுகலை பெற்று பிரான்ஸ் , இத்தாலி , ஜெர்மனி, சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயினில் வசிப்பவர்கள் பெற்றுள்ளதுடன் முதலிடத்தையும் குறித்த நாடுகள் பெற்றுள்ளன.
இரண்டாவது இடத்தில் 193 இடங்களுக்கான அணுகலை பெற்று தென் கொரியா, ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள்; வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
ஆஸ்திரியா, டென்மார்க், அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து மூன்றாவது இடத்தைப் பிடித்து, 192 இடங்களுக்கு பயணம் செய்ய அனுமதித்துள்ளது என ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
அதேவேளை உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் சீனா 62-வது இடத்தைப் பிடித்துள்ளதுடன், இந்தியா 80வது இடத்திலும், இலங்கை 96 ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.