ஜெர்மனி வெளியேறியது…. குரேஷியா கோச் விழுந்து விழுந்து சிரித்தார்… காரணம் தெரியுமா..!!
ஃபிபா உலகக் கோப்பையில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி வெளியேறிய செய்தியைக் கேட்டு, குரேஷியாவின் துணை கோச் இவிகா ஓலிக் விழுந்து விழுந்து சிரித்துள்ளார். அதற்கான காரணம் தெரியுமா. 21வது ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் நடந்து வருகின்றன.
இதில் எப் பிரிவில் இருந்த நடப்பு சாம்பியன் ஜெர்மனி, லீக் பிரிவில் 3ல் ஒரு வெற்றி, 2 தோல்விகளுடன் வெளியேறியது. கடைசியாக நடந்த லீக் ஆட்டத்தில் தென்கொரியாவிடம் 2-0 என தோல்வியடைந்து, பரிதாபமாக முதல் சுற்றுடன் வெளியறியது நடப்பு சாம்பியனான ஜெர்மனி.
இது கால்பந்து ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் டி பிரிவில் இடம்பெற்றுள்ள குரேஷியாவின் துணை கோச்சான இவிகா ஓலிக் இந்த தகவலை கேட்டதும் விழுந்து விழுந்து சிரித்துள்ளார். அவர் சிரித்ததற்கான காரணம், தகவல் கூறியவர் ஏதோ ஜோக்காக அதைக் கூறுகிறார் என்று நினைத்தாராம் ஓலிக். ஜெர்மனி கிளப் அணிக்காக 12 ஆண்டுகள் விளையாடியவர் ஓலிக். ஆனால் ஜெர்மனி அணி இந்த உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்படவில்லை என்று ஓலிக் கூறியுள்ளார்.
கடந்த மே மாதம் ஐபிஎல் போட்டிகள் நடந்தபோது, பிளே ஆப் சுற்றுக்கு நடிகை பிரீத்தி ஜிந்தாவின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் முன்னேறவில்லை. ஆனால், பஞ்சாபை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியும் பிளே ஆப் முன்னேறாததை மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் பிரீத்தி ஜிந்தா. இந்த சம்பவம் உங்களுக்கு ஞாபகம் வந்தால், அதற்கு கம்பெனி பொறுப்பல்ல.