SuperTopAds

ஸ்பெயினை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது ரஷியா

ஆசிரியர் - Editor II
ஸ்பெயினை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது ரஷியா

ரஷியாவில் நடந்து வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்றுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில்  நேற்று இரவு 7.30 மணிக்கு நடந்த ஆட்டத்தில் ஸ்பெயின் மற்றும் ரஷியா அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் அபாரமாக விளையாடினர். ஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் செர்கய் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆட்டத்தின் 42-வது நிமிடத்தில் ரஷியா வீரர் ஏரியம் டியுபா ஒரு கோல் அடித்தார். இதையடுத்து  ஆட்டத்தின் முதல் பாதிய்ல் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகித்தன.

கூடுதலாக வழங்கப்பட்ட முதல் 15 நிமிடங்களில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்காததால் மறுபடியும் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அப்பொழுது மழை பெய்ததால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இறுதியாக  பெனால்டி ஷூட் முறை நடத்தப்பட்டது. முதலில் ஸ்பெயின் ஒரு கோல் அடித்தது.

அதற்கு பதிலடியாக ரஷியாவும் ஒரு கோல் அடித்தது. மறுபடியும் ஸ்பெயின் ஒரு கோல் அடிக்க 2-1 என ஆனது. ரஷியா மறுபடியும் கோல் அடிக்க 2-2 என சமனானது.

அடுத்த வாய்ப்பை ஸ்பெயின் அடித்த கோலை கோ கீப்பர் தடுத்தார். ரஷியா தனது அடுத்த வாய்ப்பை கோல் அடித்ததால் 2-3 என்ற கணக்கில் முன்னேறியது. ஸ்பெயின் ஒரு கோல் அடிக்க 3-3 என சமனானது.

அடுத்து கோல் போட்டதால் ரஷியா 3-4 என முன்னேறியது. இறுதியாக ஸ்பெயின் கோல் தடுக்கப்பட்டதால் 4-3 என்ற கணக்கில் ரஷியா வென்றது.