போலி வீசாவில் கனடா செல்ல முயன்ற யாழ்.பருத்தித்துறை இளைஞன் கைது!

ஆசிரியர் - Editor I
போலி வீசாவில் கனடா செல்ல முயன்ற யாழ்.பருத்தித்துறை இளைஞன் கைது!

சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட  கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச்செல்ல முயன்ற இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10)  கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் , பருத்தித்துறை பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய இளைஞராவார்.

இவர் நேற்று இரவு 07.10 மணியளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் மூலம் கத்தார் தோஹாவிற்கு செல்ல கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

விமான அனுமதிக்கான சோதனையின் போது இவரது ஆவணங்கள் தொடர்பில் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவற்றை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு குடியகல்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

விசாரணையில் குறித்த கடவுச்சீட்டு போலியான தகவல்களுடன் தயாரிக்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டதையடுத்து குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த போலி கடவுச்சீட்டு தனது தாயின் சகோதரனான தனது மாமாவின் உதவியுடன் தரகர் ஒருவரிடத்தில் 40 இலட்சம்  ரூபாய் வழங்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவர் இலங்கையில் இருந்து கத்தார் தோஹாவிற்கு சென்று அங்கிருந்து சட்டவிரோதமாக கனடாவுக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாணைக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு