தலைக்கவசம், கூரிய ஆயுதத்தினால் தாக்கி ஒருவர் கொலை!

ஆசிரியர் - Editor I
தலைக்கவசம், கூரிய ஆயுதத்தினால் தாக்கி ஒருவர் கொலை!

ஹங்வெல்ல பிரதேசத்தில் நபரொருவரை தலைக்கவசம் மற்றும் கூரிய ஆயுதம் என்பவற்றினால் தாக்கி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இரு நபர்கள் சந்தேகத்தின் பேரில் தெற்கு மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கொஸ்கம, சூரிய வெவ பிரதேசங்களைச் சேர்ந்த 24 மற்றும் 31 வயதுடையவர்களாவர்.

தெற்கு மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கொஸ்கம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டடுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு