SuperTopAds

ஸ்பெயினை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது ரஷ்யா

ஆசிரியர் - Editor II
ஸ்பெயினை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது ரஷ்யா

உலகப்கோப்பை கால்பந்து போட்டில் இன்று நடந்த நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் - ரஷ்யா அணிகள் மோதின. இதில் பெனால்டி சுற்றில் 3-4 என்ற கோல் கணக்கில் ரஷ்யா வெற்றி பெற்றது.

ஆட்டம் தொடங்கிய 10வது நிமிடத்தில், ரஷ்ய வீரர் அடித்த ஓன் சைடு கோலினால், ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இந்நிலையில், 41வது நிமிடத்தில் ரஷ்ய வீரர் ஆர்டம் ட்சுபா கோல் அடித்து 1-1 என்ற கோலில் ஆட்டத்தை சமன்படுத்தினார்.

அதன் பிறகு இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியாததால், கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது.

இப்போட்டியில் ஒதுக்கப்பட்ட கூடுதல் நேரமே, 2018 உலகக்கோப்பையில் ஒதுக்கப்பட்ட முதல் கூடுதல் நேரமாகும்.

ஆனால், இரண்டு முறை ஒதுக்கப்பட்ட கூடுதல் நேரம் முடிந்தபிறகும் இரு அணிகளாலும் கோல் போடமுடியவில்லை.

இதனால் போட்டியின் முடிவு பெனால்டி முடிவை நோக்கிச் சென்றது. பெனால்டியின் போது முதலில் ஸ்பெயின் கோல் அடித்தது. இதற்கு பதிலடியாக ரஷ்யா அடுத்தடுத்து இரண்டு கோல் அடித்து 2-3 என முன்னிலை பெற்றது. . மீண்டும் ஸ்பெயின் ஒரு கோல் அடித்த நிலையில், இறுதியில் ரஷ்யா மீண்டும் ஒரு கோல் அடித்து 3-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது

இதன் மூலம் ரஷ்யா காலிறுதிக்குள் நுழைந்தது. ஸ்பெயின் அணி 2010 கால்பந்து உலகப்கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.