பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்தி, போத்தலால் அடித்த இருவரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள், ஒருவர் தப்பி ஓட்டம்..

ஆசிரியர் - Editor I
பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்தி, போத்தலால் அடித்த இருவரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள், ஒருவர் தப்பி ஓட்டம்..

மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் மோட்டார் சைக்கிளை விட்டு தப்பிச்செல்ல முற்பட்டபோது, அவர்களை துரத்திச்சென்ற பொலிஸ் உத்தியோகத்தரை குறித்த மூன்று பேரும் கத்தியால் குத்தி போத்தலால் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.

அவ்வேளை மூன்று சந்தேக நபர்களில் இருவர் பிரதேசவாசிகளின் உதவியுடன் வெள்ளவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவரது கையில் மூன்று கத்திகுத்து காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தப்பிச்சென்ற மற்றொரு சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கை தொடர்பிலான விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு