ஐரோப்பிய நாடுகளை குறிவைக்கும் சீனா!

ஆசிரியர் - Admin
ஐரோப்பிய நாடுகளை குறிவைக்கும் சீனா!

ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி உட்பட 6 நாடுகளின் குடிமக்களுக்கு விசா இல்லாத பயண அனுமதி அளிக்க சீனா முன்வந்துள்ளது. குறித்த தகவலை சீனத்து வெளிவிவகார அமைச்சகம் உறுதி செய்துள்ளது. பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின் ஆகிய ஐரோப்பிய நாடுகளுடன் மலேசியாவுக்கும் ஓராண்டு காலம் விசா இல்லாத பயண அனுமதி அளிக்க சீனா முடிவு செய்துள்ளது.     

எதிர்வரும் டிசம்பர் மாதம் தொடங்கி, 2024 நவம்பர் 30ம் திகதி வரையில் இந்த சலுகை அமுலில் இருக்கும் என்றும், இந்த நாடுகளைச் சேர்ந்த சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் 15 நாட்கள் வரை விசா இல்லாமல் சீனாவில் வணிகம் சார்ந்த அல்லது சுற்றுலா பயணங்களை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டமானது, சீனாவின் உயர்தர வளர்ச்சிக்கு உதவும் என்றே நம்பப்படுகிறது. தற்போது சீனாவில் நுழைய அல்லது பயணம் மேற்கொள்ள பெரும்பாலான வெளிநாட்டவர்களுக்கு விசா அனுமதி தேவை.

ஆனால் விலக்கு அளிக்கப்பட்டவர்களின் பட்டியலில் சிங்கப்பூர் மற்றும் புருனேயின் குடிமக்கள் உள்ளனர். இவர்கள் 15 நாட்களுக்கு மிகாமல் வணிகம் அல்லது சுற்றுலா சார்ந்த பயணங்களை விசா இன்றி மேற்கொள்ளலாம்.

கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு விதிகளுக்கு பின்னர் மார்ச் மாதத்தில் இருந்தே சீனா அனைத்து வகையான விசா அனுமதியும் அளித்து வருகிறது. 2020 மார்ச் மாதத்தில் இருந்தே கடுமையான பயண கட்டுப்பாடுகளை சீனா விதித்திருந்தது.

மூன்று ஆண்டுகளாக, பயணக் கட்டுப்பாடுகள், பல நாட்கள் நீடித்த ஊரடங்குகள் மற்றும் அடிக்கடி முன்னெடுக்கப்பட்ட கட்டாய சோதனை ஆகியவற்றுடன் சீனா உலகின் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளைக் கொண்டிருந்தது.

இந்த கடும் போக்கு நடவடிக்கைகளால் சீனாவின் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்தது. கடந்த டிசம்பர் மாதத்தில் தான் கட்டுப்பாடுகளை முழுமையாக விலக்கிக்கொண்டனர்.

கொரோனா பெருந்தொற்றுக்கு முன்னர் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான சர்வதேச பயணிகள் சீனாவிற்கு வருகை தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு