"பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும்" - சிட்னியில் மாணவர்கள் பிரம்மாண்ட பேரணி!

ஆசிரியர் - Admin

பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று அவுஸ்திரேலியாவில் மாணவர்கள் பிரம்மாண்ட பேரணியை நடத்தியுள்ளனர். இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை ஒரு மாதத்தை கடந்து நடைபெற்று வந்த நிலையில், மனிதாபிமான உதவிகளை மேற்கொள்வது மற்றும் பிணைக் கைதிகளை விடுவிப்பது ஆகியவற்றிற்காக இன்று முதல் 4 நாட்களுக்கு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போர் நடவடிக்கையில் அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் நேரடியாக இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் துருக்கி, சவுதி அரேபியா, ஈரான் ஆகிய நாடுகள் பாலஸ்தீன மக்களுக்கு துணையாக நிற்கின்றன.

இதற்கிடையில், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இஸ்ரேலுக்கு ஆதரவாக பொதுமக்களில் ஒரு பிரிவினரும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஒரு பொதுமக்கள் பிரிவினரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், தற்போது சிட்னி நகரிலும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இணைந்து பிரம்மாண்ட பேரணியை நடத்தியுள்ளனர்.

பேரணியில் பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க கோரி முழக்கமிட்ட படியே மாணவர்கள் சிட்னி மாநகராட்சி அலுவலகத்தை நோக்கி சென்றனர்.

வகுப்புகளை புறக்கணிக்க வேண்டாம் என மாநில முதலமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவுறுத்தி இருந்த நிலையில், அதனை மீறி அனைத்து வயது மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து பேரணியில் கலந்து கொண்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு