பிரித்தானிய வாக்காளர்களை சாடிய சுயெல்லா பிரேவர்மேன்!

ஆசிரியர் - Admin
பிரித்தானிய வாக்காளர்களை சாடிய சுயெல்லா பிரேவர்மேன்!

பிரித்தானியாவில் புலம்பெயர் மக்களின் எண்ணிக்கை 745,000 தொட்டுள்ளதை அடுத்து, பிரித்தானிய வாக்காளர்களின் முகத்தில் விழுந்த அறை என சாடியுள்ளார் முன்னாள் உள்விவகார செயலர் சுயெல்லா பிரேவர்மேன். கடந்த ஆண்டில் புலம்பெயர் மக்களின் மொத்த எண்ணிக்கை தொடர்பான புள்ளிவிவரங்களை மறு ஆய்வு செய்த நிலையில், தற்போதைய எண்ணிக்கை அதிகமாக பதிவாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.     

இந்த நிலையில், முன்னாள் உள்விவகார செயலர் சுயெல்லா பிரேவர்மேன் தெரிவிக்கையில், புலம்பெயர் மக்களின் இன்றைய சாதனை எண்ணிக்கை என்பது இரண்டே ஆண்டுகளில் கூடுதலாக ஒரு மில்லியன் மக்களை அனுமதித்துள்ளோம் என்பதை உறுதி செய்துள்ளது என்றார்.

இது பர்மிங்காம் பகுதிக்கு சமமான மக்கள் தொகை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குடியிருப்புகள், மருத்துவமனைகள், பாடசாலைகள், சம்பளம் மற்றும் சமூக ஒற்றுமையில் தேவையற்ற அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இந்த நிலைக்கு எதிராக நாம் எப்போது குரல் எழுப்புவோம் என்றும் வினவியுள்ளார்.

புலம்பெயர் மக்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான உறுதிமொழியின் பேரில் நாம் தெரிவு செய்யப்பட்டோம். ஆனால் இன்றைய சாதனை எண்ணிக்கை என்பது பிரித்தானிய வாக்காளர்களின் முகத்தில் விழுந்த அறை என்றார் சுயெல்லா பிரேவர்மேன்.

இதனிடையே, புலம்பெயர் மக்களின் எண்ணிக்கையை குறைப்பது என்பது ரிஷி சுனக் நிர்வாகத்திற்கு வாழ்வா சாவா விவகாரம் என்று வலதுசாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

புலம்பெயர் மக்களின் எண்ணிக்கையை 230,000 என கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்று ரிஷி சுனக் உறுதி அளித்திருந்தார். ஆனால் தற்போது பதிவாகியுள்ள எண்ணிக்கை மிக மிக அதிகம் என்றே பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் முதல் கடந்த ஜூன் வரையான காலகட்டத்தில் பிரித்தானியாவுக்கு 1.18 மில்லியன் மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர். இதில் பெருபகுதி சட்டப்பூர்வமாகவே வந்துள்ளனர். ஆனால் அதில் 508,000 பேர்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு