வடமாகாணத்திற்கு அரசியல் தீர்வும் - அபிவிருத்தியும்! ஐனாதிபதி நாடாளுமன்றில் அறிவிப்பு...

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்திற்கு அரசியல் தீர்வும் - அபிவிருத்தியும்! ஐனாதிபதி நாடாளுமன்றில் அறிவிப்பு...

காஸா  பிரச்சினைக்கு அரசியல் தீர்வு இல்லாமையே காரணமாகும் அதனால் அங்கு அரசியல் தீர்வொன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் இலங்கையிலும் வடக்குக்கு அரசியல் தீர்வு வழங்கி வடக்கை அபிவிருத்தி செய்ய இருக்கிறோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சுகளுக்கான  ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில் ரவூப் ஹக்கீம் காஸா தொடர்பாக ஆற்றிய உரைக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

வடக்குக்கு அரசியல் தீர்வு வழங்கி வடக்கை அபிவிருத்தி செய்ய இருக்கிறோம். ஏனெனில் வடக்கில் சிறந்த பொருளாதாரம் ஒன்று இருக்கிறது.

குறிப்பாக சுமை பொருளாதாரம் எரிசக்தி தொடர்பான பொருளாதாரம் போன்ற பல வளங்கள் அங்கு இருக்கிறன. அதனால் வடக்கில் பலமான பொருளாதாரத்தை உருவாக்குவதே எமது இலக்காகும்.

நாங்கள் தொழில் நிமித்தம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு எமது தொழிலாளர்களை நீண்டகாலமாக அனுப்பி வருகிறோம்.

அதன் பிரகாரம் தொழில் அமைச்சர் அடுத்த கட்டமாக இஸ்ரேலுக்கு தொழிலுக்கு அனுப்ப ஒப்பந்தம் செய்திருக்கிறார் என்றாலும் இஸ்ரேலுக்கு தொழிலுக்கு செல்ல தற்போது 10ஆயிரம் பேர் இருக்கும் என நான் நினைக்கவில்லை.

யுத்தம் இடம்பெறும் நாட்டுக்கு செல்ல யாரும் விரும்பமாட்டார்கள் என்றாலும் தற்போதைய நிலையில் இஸ்ரேலுக்கு செல்வது எந்தளவு பொருத்தம் என தெரியாது. என்றாலும் இது தொடர்பாக நான் தொழில் அமைச்சரிடம் வினவுகிறேன்.

அத்துடன் எமது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. காஸா மீது இஸ்ரேலின் தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டித்திருக்கிறோம்.

ஹமாஸ் இஸ்ரேல் மீது மேற்கொண்ட தாக்குதலையும் நாங்கள் கண்டித்திருந்தோம். என்றாலும் இதற்கு தீர்வு காஸா மீது தாக்குதல் மேற்கொள்வதல்ல.

அதனால் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண  நாங்கள் ஆரம்பத்தில் இருந்து தெரிவித்து வந்த விடயம்தான் இதனை காஸாவை பார்த்து மேற்கொள்ள முடியாது. வெஸ்பேனை நோக்கி பார்த்து, அங்குவந்து இஸ்ரேலில் குடியமர்ந்தவர்களை அகற்றுவதன் மூலமமே இதனை ஆரம்பிக்க வேண்டும்.

அத்துடன் பலஸ்தீன அதிகாரசபை ஊடாக இந்த பிரச்சினைக்கு தீர்வுகாணுவது தொடர்பாக பலரும் கதைத்து வருகின்றனர். அமெரிக்காவும் பேசி இருந்தது. அதகாரசபை ஊடாக தீர்வுகாண முடியும் என நான் நினைக்கவில்லை.

அரசியல் தீர்வு இல்லாமையே இதற்கு காரணமாகும். அதனால் அரசியல் தீர்வொன்றை வழங்குவதன் மூலமே அந்த பிரச்சினைக்கு தீரவு காணமுடியும் என்று நாங்கள் நினைக்கிறோம்.

அத்துடன் இலங்கையிலும் நாங்கள் வடக்குக்கு அரசியல் தீர்வு வழங்கி வடக்கை அபிவிருத்தி செய்ய இருக்கிறோம். ஏனெனில் வடக்கில் சிறந்த பொருளாதாரம் ஒன்று இருக்கிறது. குறிப்பாக பசுமை பொருளாதாரம்  எரிசக்தி தொடர்பான பொருளாதாரம் போன்ற பல வளங்கள் அங்கு இருக்கிறன.

அதனால் அடுத்த  தசாப்தத்தில் வடக்கில் பலமான பொருளாதாரத்தை உருவாக்குவதே எமது இலக்காகும்.

எனவே காஸா தொடர்பில் எமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அது தொடர்பாக ரவூப் ஹக்கீம் சந்தேகம் கொள்ளத்தேவையில்லை என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு