பாலியல் வல்லுறவுக்குள்ளாகும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிர்ச்சியளிக்கு வகையில் உயர்வு!

ஆசிரியர் - Editor I
பாலியல் வல்லுறவுக்குள்ளாகும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிர்ச்சியளிக்கு வகையில் உயர்வு!

காதல் உறவுகளினால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகும் பதினாறு வயதுக்கு உட்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பெற்றோர் அவதானமாக இருக்குமாறு பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த வருடத்தின் கடந்த ஒன்பது மாதங்களில் மாத்திரம் 917 சிறுவர்கள் இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

இது கடந்த 2022 வருடத்துடன் ஒப்பிடும் போது அதிகரித்துக் காணப்படுகிறது.

இதேவேளை, கடந்த ஒன்பது மாதங்களில் மட்டும் கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளானவர்களின்  எண்ணிக்கை 425 ஆகும்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது  அதிகரிப்பையே காட்டுவதாகவும் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் தெரிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு