மாவீரர் நாளில் நகைக் கடைகள் திறக்கப்படாது! - லண்டன் தங்க நகைமாளிகைகள் உரிமையாளர்கள் அறிவிப்பு.

ஆசிரியர் - Admin
மாவீரர் நாளில் நகைக் கடைகள் திறக்கப்படாது! - லண்டன் தங்க நகைமாளிகைகள் உரிமையாளர்கள் அறிவிப்பு.

தமிழீழ தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு 27.11.2023 அன்று லண்டனில் இருக்கும் தங்க நகைமாளிகைகள் திறக்கப்படாது என உரிமையாளர்கள் அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளனர்.     

அவர்கள் விடுத்துள்ள அறிவித்தலில், “எமக்கு ஒரு சுதந்திர தேசம் வேண்டும் என்ற குறிக்கோளோடு, தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய எம் மாவீரர்களின் வீரத்தை நாம் போற்றி வணங்குவதுடன், நாம் தலைமுறை தாண்டியும் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவது எம் தார்மீக கடமை என்பதை, லண்டனில் இருக்கும் தங்க நகைமாளிகை உரிமையாளர்கள் ஆகிய நாம் உணர்ந்து நிற்கின்றோம்.

இதனை வலியுறுத்தும் முகமாக வரும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் (27.11.2023 )அன்றும், மற்றும் இனிவரும் காலங்களில் மாவீரர் நாட்களில், லண்டனில் இருக்கும் எமது தங்க நகை மாளிகைகளுக்கு விடுமுறையை அறிவிக்கின்றோம்.

எம் ஒற்றுமைக்கும், தாயக பற்றுக்கும் எடுத்துக்காட்டாக இச் செயல்பாடு இருப்பதுடன், எமது பணியாளர்களும் எம் மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்திட இவ் விடுமுறை அறிவித்துள்ளோம், என்பதை எமது வாடிக்கையாளர்களுக்கு மற்றும் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு