அரச ஊழியர்களுக்கு 10000 ரூபாய் கொடுப்பனவு - வரவு செலவு திட்டம்..
அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு
அரச ஊழியர்களுக்கு 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் சம்பள உயர்வு கிடைக்கவில்லை.
எனவே அரச ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்க உத்தேசி க்கப்பட்டுள்ளது.
ஜனவரி 2024 முதல் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு 10,000 ரூபாயால் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளார்.
எனினும் இந்த கொடுப்பனவு 2024 ஏப்ரல் மாத சம்பளத்து டனேயே வழங்கப்படும்.
இதற்கமைய அந்த கொடுப்பனவு 17,800 ஆக உயர்த்தப்ப டும்.
ஓய்வூதியர்களுக்கு 2500 ரூபாய்
ஓய்வூதியர்களுக்கான வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 2500 ஆக அதிகரிக்கப்படும்.
அரச ஊழியர்களுக்கு விசேட கடன்
அரச ஊழியர்களுக்கு விசேட கடன் வழங்க ஜனாதிபதி முடிவு
மூத்த குடிமக்களுக்கு 3000
மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை கொடுப்பனவு 3,000/- ரூபாயாக அதி கரிக்கப்படும்.
கர்ப்பிணிகளுக்கு மாதாந்த கொடுப்பனவு
கர்ப்பிணிகளுக்கான மாதாந்த கொடுப்பனவு அதிகரிப்பு
தோட்ட தொழிலாளர்கள்..
தோட்ட தொழிலாளர்களுக்கு காணி உரிமை.
நிவாரணங்கள் ஒதுக்கீடுகள்
முந்தைய ஆண்டுகளில், சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்காக செலவழிக்கப்பட்ட பணத்தின் 3 மடங்கு 2024 ஆம் ஆண்டின் நிவாரணத்திற்காக செலவிடப்படும்.
ஊனமுற்ற நபர்கள், CKDU நோயாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான நன்மை திட்டங்களுக்கு 205 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு்.
2024 பட்ஜெட்டில் இருந்து SME களின் வளர்ச்சிக்காக 50 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு்.
சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவுடன் 30 பில்லியன் ரூபாய் கடன் வசதி.
அரச துறையினருக்கு காப்புறுதி
அரச துறையின் மாதாந்த சம்பளத்திற்காக 93 பில்லியன் ரூபா, காப்புறுதி, மருந்துகள், ஓய்வூதியம் உட்பட பொதுநல செலவுகளுக்கு 30 பில்லியன் ரூபா,
கடன் வட்டி செலுத்த 220 பில்லியன் ரூபா என 3 பிரதான செலவுகளுக்காக மாத்திரம் அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் 383 பில்லியன் ரூபாவை செலவிடுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
வாடகை இல்லை
குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படும் நகர்ப்புற வீட்டு வளாகங்களில் இருந்து வாடகை பெறுவது நிறுத்தப்படும்.
அந்த வீடுகளின் உரிமை குடியிருப்போருக்கே வழங்கப்படும்.
கிராம நிலங்கள் விவசாயிகளின் தனிப்பட்ட உரிமைக்கு வழங்கப்படும். இதன் ஊடாக 20 குடும்பங்களுக்கு சொத்து கிடைக்கும். இதற்காக 2 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
பெருந்தோட்ட வீடுகளை நிர்மாணிப்பதற்கான காணி உரிமைகளை வழங்குவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாக 4 பில்லியன் நிதி ஒதுக்கீடு.
மிசவிய வேலை திட்டத்திற்கு 600 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
வரிச்சலுகை
நீண்ட காலமாக இடம்பெற்றுவரும் வரி விலக்குகள் உள்ளிட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் பல்வேறு முன்மொழிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும்,
அதன் ஊடாக அரச வருமானம் அதிகரிக்கும் போது அதனை விட அதிகமான வரிச் சலுகைகளை வழங்க முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.