மாகாணமட்டத்தில் புதிய சாதனை படைத்த மன்னார் மாணவி

ஆசிரியர் - Editor II
மாகாணமட்டத்தில் புதிய சாதனை படைத்த மன்னார் மாணவி

வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான தடகள போட்டிகள் யாழ்.துரையப்பா விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகின்ற  நிலையில் நேற்று இடம் பெற்ற  16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 300 மீற்றர் தடைதாண்டல் போட்டியிலே மடு கல்வி வலயத்திற்குட்பட்ட  தட்சனாமருதமடு மகா வித்தியாலய மாணவி யோ.சுடர்மதி புதிய சாதனையை (record break) நிலைநாட்டியுள்ளார்.

 2018 ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் மாணவி ஒருவர் குறித்த நிகழ்வினை 51.7 செக்கன்களில் முடித்து சாதனை நிகழ்த்தி இருந்தார் .

 அதனை நேற்று இடம் பெற்ற போட்டியில் யோ.சுடர்மதி 50.08 செக்கன்களில் ஓடி முடித்து புதிய மாகாண சாதனையை நிலை நாட்டி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு