தேசிய பூங்காவுக்கு பெண்களுக்கு அனுமதியில்லை!! -தலிபான்கள் மேலும் ஒரு தடை-

ஆசிரியர் - Editor II
தேசிய பூங்காவுக்கு பெண்களுக்கு அனுமதியில்லை!! -தலிபான்கள் மேலும் ஒரு தடை-

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள தலிபான்கள், பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள். 

குறிப்பாக உயர்நிலை கல்வி பயிலவும், பல்கலைக்கழகங்கள், அரசு சாரா நிறுவனங்கள் போன்றவற்றில் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டது. 

இந்நிலையில் தேசிய பூங்காக்களுக்கு பெண்கள் செல்லக்கூடாது என்று தலிபான்கள் மேலும் ஒரு தடை விதித்துள்ளனர். 

இதுகுறித்து தலிபான் அரசின் நல்லொழுக்கம் துறை துணை மந்திரி காலித் ஹனாபி கூறும்போது:-

பூங்காவுக்கு செல்லும்போது பெண்கள் ஹிஜாப் அணிவதில் சரியான முறையை கடைபிடிப்பதில்லை. பெண்கள் பூங்காவுக்கு செல்வதற்கான விதிமுறைகள் தயாராகி வருகின்றன. அதுவரை பெண்கள் பூங்காவுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு