ரஷ்ய தலைநகரத்தில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்

ஆசிரியர் - Editor II
ரஷ்ய தலைநகரத்தில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் இரண்டு தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டின் அரசு  தெரிவித்துள்ளது.

இவ்வாறு தாக்குதல் நடத்திய ட்ரோன்களை தங்களது வான் பாதுகாப்புப் படைகள் அழித்ததாகவும் ரஷ்யா மேலும் தகவல் தெரிவித்துள்ளது.

விபத்துக்குள்ளான ஆளில்லா விமானத்தின் இடிபாடுகளால் இருவர் காயமடைந்ததாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மாஸ்கோ பிராந்தியத்தில் உள்ள 4 விமான நிலையங்களின் செயல்பாடுகள் இடைநிறுத்தப்பட்டன, பல விமானங்கள் 'சிவில் பாதுகாப்பு'க்காக திருப்பிவிடப்பட்டன என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரஷ்யாவின் பெடரல் ஏர் டிரான்ஸ்போர்ட் ஏஜென்சி விமான நிலையங்கள் சீர்குலைந்ததற்கான காரணத்தை குறிப்பிடவில்லை. ஆனால் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கைகள் உக்ரைன் ட்ரோன்களின் தாக்குதல்களை சுட்டிக்காட்டுகின்றன.

ட்ரோன் தாக்குதல்கள் தொடர்பிலான ரஷ்யாவின் குற்றச்சாட்டுகளுக்கு உக்ரைன் தரப்பிலிருந்து எந்த அறிக்கையும் வெளியாகவில்லை.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு