நகர்ப்புற மரக் காடுகளின் கண்ணீர் கதைகள் ..

கட்டிடக்காடுகளே எங்களை உங்களுக்கு ஞாபகம் இருக்கின்றதா எங்களை வெட்டி உங்களைக் கட்டி விட்டார்கள் இந்த உணர்வற்ற உயிர் உள்ள மனிதர்கள் சிலர்
கட்டிடக்காடுகளே பச்சிளம் காடுகள் நாம் எப்படி உரு வானோமென்று உங்களுக்குத் தெரியுமா ?
இயற்கையாக உருவான எம்மை இன்னும் புரிந்து கொள்ளவில்லை இந்த மனிதர்களில் சிலர்.
கட்டிடக்காடுகளில் வாழும் மனிதா நீ உயிரோடு வாழ்வதற்கு பச்சிளம் காடுகள் நாம் தேவை என்பதை உணரவில்லை சிலர்.
சில மனிதர்கள் தங்கள் சுயநலத்துக்காகவும் சுற்றாடலை அழகுபடுத்துவோம் என்பதற்காகவும் இப்போதும் எம்மை அழித்துக் கொண்டிருக்கின்றார்கள்
புதிய புதிய கட்டிடங்களை உருவாக்கி அதற்கு குளிரூட்டியல் பொருத்தப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய சமூகம் இயற்கையாக உருவாகும் உருவாக்கப்படும் மரங்களை பராமரிக்காமல் புறந்தள்ளப்பட்டு கொண்டிருக்கின்றன நகர்ப்புறங்களில்
உண்மையிலேயே இந்த இயற்கையான மரங்கள் சுற்றுச்சூழலை எவ்வாறு பாதுகாக்கின்றது என்பது தொடர்பாக தெரிந்து கொண்டும் அல்லது புரிந்து கொண்டும் இதனை அழித்துக் கொண்டிருப்பது மிகவும் மன வேதனைக்குரியது
ஆனால் ஒரு காட்டை அழித்து நகரமாக்குவது என்பது மிகவும் இலகுவானது காட்டை முழுமையாக அளித்து கட்டிடத்தில் வாழும் மனிதன் முழுமையான ஆரோக்கியமாக வாழ முடியுமா? அது கேள்விக்குறியான. விடையம் தான்
குறிப்பாக அன்று யாழ் நகர்ப்புறத்திலே யாழ் மாவட்ட செயலகம் அதன் அருகில் உள்ள பாளையா பூங்கா போன்ற இடங்கள் இயற்கையான காடுகளாக அமையப்பட்டன
அப்பகுதியில் தான் கூடுதலான பறவைகளும் வவ்வாலும் வாழும் இடங்களாக கூறப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
ஆனால் இன்று நகர்புறங்களில் பறவைகளின் நடமாட்டங்கள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன
இன்று பறவைகளின் இருப்பிடங்களாக. நகர் புறங்களில் மின்சார கம்பங்களிலும் கட்டிட இடைவெளிகளிலுமாக அமைந்துள்ளன
எனவேதான் யாழ் நகர்ப்புறத்தில் அவ்வாறான ஒரு காட்டை உருவாக்க முடியாவிட்டலும் சிறிய சிறிய காடுகளை உருவாக்குவதற்கான வழிகளையும் சூழலையும் உருவாக்க வேண்டும் என்பதே எமது கருத்தகும்.
இயற்கையுடன் இணைந்து வாழ்வோம் இன்பமாக. எல்லோரும் .
வீ.எஸ். சுதா