SuperTopAds

`இரண்டு பந்துகளை ஆடாமல் விட்டால், ரூ. 1.35 கோடி" இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் குறித்து உமர் அக்மல்!

ஆசிரியர் - Editor II
`இரண்டு பந்துகளை ஆடாமல் விட்டால், ரூ. 1.35 கோடி

கடந்த 2015-ம் ஆண்டில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் இணைந்து உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தியது. இதில் அடிலெய்ட்டில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தியா அடுத்தாண்டு இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பையில் மீண்டும் பாகிஸ்தானுடன் ஜூன் 16-ம் தேதி மோத உள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் நேற்று டி.வி சேனல் ஒன்றுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டார். 

“கடந்த உலகக்கோப்பையில் ஒரு போட்டியில் இரண்டு பந்துகளை விளையாடாமல் விடுவதற்கு சூதாட்டத் தரகர்கள் எனக்கு சுமார் 1.35 கோடி ரூபாய் தருவதாக கூறினர். அது, இந்தியாவுடனான உலகக்கோப்பை போட்டி. அந்தப் போட்டியில் களமிறங்காமல் இருக்கவும் என்னிடம் கேட்டனர். ஆனால், பாகிஸ்தானுக்காக விளையாடுவதில் உறுதியாக உள்ளேன். இதுபோன்று மீண்டும் என்னை அணுக வேண்டாம் என மறுத்து விட்டேன். உலகக்கோப்பை தொடர் என்றில்லாமல், இந்தியாவுடன் நடக்கும் அனைத்துப் போட்டிகளுக்கும் இது போன்ற அழைப்புகள் வரும்” என்றார் உமர் அக்மல்.