மேற்கிந்திய தீவுகளை திணறடித்த இலங்கை

ஆசிரியர் - Admin
மேற்கிந்திய தீவுகளை திணறடித்த இலங்கை

மேற்கிந்தியா சென்றுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் மேற்கிந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

இந்நிலையில்இ மூன்றாவது டெஸ்ட் போட்டி பார்படாசில் தொடங்கியது. நாணயச்சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிராத்வைட்இ டேவன் ஸ்மித் களமிறங்கினர். இலங்கை அணியினரின் துல்லியமான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இருவரும் விரைவில் அவுட்டாகினர்.

பிராத்வைட் 2 ரன்னிலும், ஸ்மித் 2 ரன்னிலும் பாவெல் 4 ரன்னிலும் அவுட்டாகி வெளியேறினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

அடுத்து இறங்கிய ஹோப் 11 ரன்னிலும், ரோஸ்டன்சேஸ் 14 ரன்னிலும் அவுட்டாகினர். அப்போது அணியின் எண்ணிக்கை5 விக்கெட்டுக்கு 53 ரன்கள் எடுத்திருந்தது.

வெஸ்ட் அணி 33.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்தது. இதனால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. ஷேன் டாவ்ரிச் 36 ரன்களும், கேப்டன் ஜேசன் ஹோல்டர் 16 ரன்களும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.

இலங்கை அணி சார்பில் சுரங்கா லக்மல், கச்ன் ரஜிதா ஆகியொர் 2 விக்கெட்டும், லஹிரு குமரா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு