தனுஷ்க மீதான 3 பாலியல் குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டது!! -அவுஸ்திரேலியா சட்ட மா அதிபர் அறிவிப்பு-

ஆசிரியர் - Editor II
தனுஷ்க மீதான 3 பாலியல் குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டது!! -அவுஸ்திரேலியா சட்ட மா அதிபர் அறிவிப்பு-

அவுஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக மீது சுமத்தப்பட்ட 4 பாலியல் குற்றச்சாட்டுகளில் 3 குற்றசாட்டுகள் கைவிடப்பட்டுள்ளன.

குறித்த 3 குற்றச்சாட்டுக்களும் அந்நாட்டு சட்ட மா அதிபரால் மீளப்பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு இடம்பெற்ற ரி-20 உலகக் கிண்ண தொடர் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றிருந்த போது தனுஷ்க குணதிலக்க விளையாடிய முதல் போட்டியில் அவருக்கு உபாதை ஏற்பட்டதால் அவர் தொடரில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், சமூகவலைத்தளம் ஊடாக அறிமுகமான பெண்ணொருவரை சந்தித்து, சிட்னியின் கிழக்குப் புறநகரில் உள்ள பெண்ணின் வீட்டிற்கு தனுஷ்க குணதிலக்க சென்றுள்ளார்.

இந்நிலையில், தனது அனுமதி இல்லாமல் தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார் என குறித்த பெண் தனுஷ்கவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தார்.

இதையடுத்து தனுஷ்க குணதிலக்க 2022 ஆம் அண்டு நவம்பர் மாதம் 5 ஆம் திகதி அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இதன்படி, தொடரப்பட்ட 4 பாலியல் குற்றச்சாட்டுக்களில் 3 குற்றச்சாட்டுக்கள் கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு