SuperTopAds

சீனி மற்றும் கோதுமை மாவின் விலைகள் அதிகரிப்பு!

ஆசிரியர் - Editor I
சீனி மற்றும் கோதுமை மாவின் விலைகள் அதிகரிப்பு!

இறக்குமதி செய்யப்படும் கோதுமை மா மற்றும் சீனியின் விலை அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. இன்று தொடக்கம் இந்த விலை அதிகரிப்பு அமுலாகவுள்ளது. 

இதன்படி ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாவால் அதிகரிப்பதாக அத்தியாவசிய உணப்பொருள் இறக்குமதியாளர் சங்கம் அறிவித்துள்ளது.

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக வெளியாகியிருந்த செய்திகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்த நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி, 

கோதுமை மாவுக்கு 3 ரூபாவால் சுங்க வரி சலுகை வழங்கப்பட்டிருந்தது. எனினும் மீண்டும் அதனை அறவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

எவ்வாறிருப்பினும் இதனை அடிப்படையாகக் கொண்டு மாவின் விலையை அதிகரிப்பதற்கான தேவை கிடையாது. அத்தோடு தற்போது டொலரின் பெறுமதியும் குறைவடைந்துள்ளது. 

எனவே கோதுமை மா விலை அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்று தெரிவித்திருந்தார். எவ்வாறிருப்பினும் தமக்கு வழங்கப்பட்டிருந்த வரி சலுகை நீக்கப்பட்டுள்ளமையால் 

விலையை அதிகரிக்க நேர்ந்துள்ளதாக இறக்குமதி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை இறக்குமதி செய்யப்படும் சீனியின் விலையும் 25 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.