கபடி மாஸ்டர்ஸ் 2018: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
துபாயில் கபடி மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ்ஷிப் தொடர் நேற்று துவங்கி வரும் ஜூன் 30-ந் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஈரான், தென்கொரியா, அர்ஜென்டினா, கென்யா ஆகிய ஆறு அணிகள் பங்கேற்றுள்ளன.
இதில் நேற்று நடந்த துவக்க ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணியின் அஜய் தாகூரின் சிறப்பான தலைமையின் மூலம் இந்திய அணி 22-9 என முன்னிலை வகித்தது. இதில் இந்திய வீரர்கள் அனைவருமே சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். இதனால் பாகிஸ்தான் அணி வீரர்கள் திணறினர். இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் இந்தியா 14 புள்ளிகளும், பாகிஸ்தான் 11 புள்ளிகளும் எடுத்தது. இறுதியில் இந்தியா 36-20 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.
இந்திய அணி தனது இரண்டாவது லீக் ஆட்டத்தில் கென்யாவை இன்று எதிர்கொள்கிறது.